தமிழ்நாடு

பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கிறதா பாஜக?: கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலரை மிரட்டிய ஆட்டுக்குட்டி அண்ணாமலை!

கிஷோர் கே சுவாமி தொடர்பாக கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷை அண்ணாமலை மிரட்டி பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளை  பாதுகாக்கிறதா பாஜக?: கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலரை மிரட்டிய ஆட்டுக்குட்டி அண்ணாமலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமூக வலைதளங்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. இவர் சமுக வலைதளங்களில் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் மீது அப்பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி கிஷோர் கே சுவாமியை கைது செய்யகோரி புகார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலிஸார் கிஷோர் கே சாமி மீது 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கிஷோர் கே.சாமியை 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சைதாபேட்டை சிறையில் கிஷோர் கே சாமி அடைக்கப்பட்டார். மேலும், 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிகளை  பாதுகாக்கிறதா பாஜக?: கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலரை மிரட்டிய ஆட்டுக்குட்டி அண்ணாமலை!

இந்நிலையில், கிஷோர் கே சாமி கைதுக்கு பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சிவசங்கர பாபாவுக்கு பா.ஜ.கவினர் ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பா.ஜ.க பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் நோக்கில் செயல்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து பலரும் பாலியல் குற்றவாளிகள் மற்றும் ஆபாசமாக பெண்களை இழிவுப்படுத்தும் குற்றத்திற்காக சிறையில் உள்ளவர்களுக்கு ஆதரவாக பதிவிடுவதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்தவகையில் பா.ஜ.கவில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, கிஷோர் கே சாமிக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது, இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு; கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்” எனத் தெரிவித்துள்ளார்.

பெண்களையும் முன்னாள் முதலவரையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளில் பேசிய கிஷோர் கே சாமிக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலையின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், அண்ணாமலைக்கு சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஃபோனில் தொடர்புக்கொண்டு இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

ஆனால் அவரின் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காத அண்ணாமலை, இதுபோன்று பேசுங்கள்.. விரைவில் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று பேசுயுள்ளார். இவரின் பேச்சு கேள்வி எழுப்பியவரை மிரட்டும் தோணியில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories