தமிழ்நாடு

“சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை”: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களைத் தவிர வேறு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை”: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 3ம் தேதி நீலா என்கிற பெண்சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்தது. அதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து கொரோனா பாதித்துள்ள சிங்கங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்,

அதனைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள 14 சிங்கங்களில் 10க்கு கொரோனா உறுதியானது. அதுபோல் 4 புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 10 சிங்கங்களில் 2 வயதான பெண் சிங்கங்களுக்கு மட்டும் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை கால்நடை அறிவியல் மருத்துவமனை குழுவினருடன் பூங்கா மருத்துவர்களும் சேர்ந்து தொடர்ந்து உயிரியல் பூங்கா விலங்குகள் அருகே யாரும் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி சிகிச்சை அளித்துவருகிறார்கள்.

இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அதிகாரிகளுடன் பூங்காவில் கொரோனா பாதித்த சிங்கங்கள் பகுதி, சிங்க உலவுமிடம், புலி, புதிய தாக குட்டியை ஈன்ற சிம்பன்சி குரங்கு, யானை உள்ளிட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

“சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை”: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட பின்னர் சிங்கங்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 சிங்கங்கள் கொரோனா இருந்தாலும். 2 வயது முதிர்ந்த சிங்கங்கள் சிறிது சோர்வாக உள்ளது. இந்த சிங்கங்களை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

அதுபோல், புலிகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதனால் மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவியதாகத் தகவல் எதுவும் இல்லை. அதுபோல் முதுமலை, டாப் சிலிப் ஆகிய இரண்டு யானைகள் முகாம்களிலும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனைகளுக்கு அனுப்பிய நிலையில் முதுமலையில் உள்ள 18 யானைகளுக்கும் கொரோனா நெகடிவ் என வந்துள்ளது.

அதனால் சிங்கங்களைத் தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவ வில்லை, மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க விலங்கு பராமரிப்பாளர்களுக்கு 100 சதவீகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்த உறுதி செய்துள்ளோம். அதுபோல் பி.பி.இ கிட் அணிந்தவர்கள் மட்டும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் அருகே சென்று பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories