தமிழ்நாடு

“முப்பதே நாளில் தலைமுறைகள் தாண்டி நிற்கப் போகும் முற்போக்கு நடவடிக்கைகள்” - திருச்சி சிவா MP புகழாரம்!

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 30 நாட்களில் செய்த சாதனை திட்டங்களை பட்டியலிட்டு அதற்கு புகழாரம் சூட்டியுள்ளார் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா.

“முப்பதே நாளில் தலைமுறைகள் தாண்டி நிற்கப் போகும் முற்போக்கு நடவடிக்கைகள்” - திருச்சி சிவா MP புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு மாதம் மட்டுமே ஆட்சிப் பொறுப்பேற்று! ஓர் ஆட்சிக்காலம் முழுதும், முன்பிருந்தவர்கள் எண்ணிக்கூட பார்த்திராத திட்டங்கள் அத்தனையும் இன்று செயல் வடிவத்தில். விளம்பரங்கள் இல்லை! படாடோபங்கள் இல்லை! எளிமை! எளிமை! எங்கெங்கும், எல்லாவற்றிலும்! தலைமுறைகளைத் தாண்டியும் நிற்கப் போகும் முற்போக்கு நடவடிக்கைகள்!

அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் புரட்சிகரமான காரியங்கள் அடுக்கடுக்காய்! ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கு உருவான இயக்கத்தின் இன்றைய ஒற்றைத் தலைவர் நீங்கள் என்பதன் அடையாளமாக மகளிர், மாணவர், உழவர் குடியினர், உழைக்கும் வர்க்கத்தினர், அரசு ஊழியர், ஆசிரியர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலை மக்கள் என அனைவருக்குமான திட்டங்கள் அடுக்கடுக்காக அணிவகுத்த அழகினை கண்டு உணர்ச்சிபூர்வமாகப் பாராட்டும் குரல்கள் எட்டுத் திக்கும்.

கொடும் நோய்த் தொற்றின் கோரக்கரங்கள் தொய்ந்து ஓய்ந்து போகும் அளவிற்கு துரித ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்! முதல்வரே கவச உடையணிந்து கொரோனா நோயாளிகளை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் சொன்ன பாங்கு, துணிவு கண்டு நிமிர்ந்தது நாடு ஆச்சரியத்துடன்! நிம்மதிப் பெருமூச்சு எல்லோரிடமும். மலர்ந்த முகங்கள் காணும் திசையெல்லாம். கவலைகளை மக்கள் மறந்திருக்கிறார்கள், பொறுப்புமிக்க ஆட்சி ஒன்று திறமை மிக்க முதல்வர் தலைமையில் இயங்குகிறது என்ற நம்பிக்கையினால்.

“முப்பதே நாளில் தலைமுறைகள் தாண்டி நிற்கப் போகும் முற்போக்கு நடவடிக்கைகள்” - திருச்சி சிவா MP புகழாரம்!

மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை என்ற நிலை மாறி ஏராளமான படுக்கைகள், நோயாளிகள் குறைந்த காரணத்தால் காலியாகக் கிடக்கின்றன! சிகிச்சை பார்க்கும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட, அல்லும் பகலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், எல்லா இடங்களிலும் இன்னல் கருதாது செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர் என அனைத்து முன்களப் பணியாளர்களும் முதலமைச்சரின் ஊக்கமூட்டும் அறிவிப்புகளால், அன்பான அரவணைப்பால் உற்சாகத்தோடு பணியாற்றி வரும் பாங்கு.

ஒருமாத காலத்தில் தலைகீழாக மாறியிருக்கும் தமிழ்நாடு. ஏற்றப் பாதையில் எழிலார் பயணம். பார் போற்றுகிறது. நானிலம் வியக்கிறது. விமர்சித்தோர் குரல் ஒடுங்குகிறது. ஏழைகள் சிரிக்கின்றனர். இதுதான் அறிஞர் அண்ணாவின் இலட்சியம்! தலைவர் கலைஞர் கண்ட கனவு! ஈடேறுகிறது எங்கள் கண்ணான தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில்!

தொடரட்டும் உங்கள் சீரிய பணி! அணிவகுக்கட்டும் மக்கள் மனங்குளிர செய்யும் திட்டங்கள்! நிமிர்ந்து நிற்கட்டும் மீண்டும் தமிழ்நாடு இந்திய துணைக்கண்டத்தில் முதலிடத்தில்! எங்கள் தலைவரே! திராவிடப் பேரியக்கத்தின் இன்றைய அடையாளமே! தமிழினத்தின் கலங்கரை விளக்கமே வாழ்த்துகள்.

banner

Related Stories

Related Stories