தமிழ்நாடு

ஜூன் 8 வரை கடலோர தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை தகவல்!

பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, கேரளா, மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 8 வரை கடலோர தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியபிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி வரை (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூன் 10ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 06.06.2021 சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

07.06.2021, 08.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 8 வரை கடலோர தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை தகவல்!

09.06.2021, 10.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

08.06.2021: மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

09.06.2021,10.06.2021 : மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

08.06.2021,09.06.2021: கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு : தென் மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் முன்னேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories