தமிழ்நாடு

“ஆவின் நிறுவனத்தை பாழாக்கிவிட்டது அ.தி.மு.க அரசு; முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும்” : அமைச்சர் நாசர்

அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும் என, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

“ஆவின் நிறுவனத்தை பாழாக்கிவிட்டது அ.தி.மு.க அரசு; முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும்” : அமைச்சர் நாசர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும் என, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள ஆவின் நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியுடன் இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், “பால் லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவின் நிர்வாகத்தில் அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவினில் ஐஸ்கிரீம், நெய், பால்கோவா, மோர், தயிர் உள்ளிட்ட 152 வகையான பால் உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மேலும், பல பொருட்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

வெளிநாடுகளுக்கு ஆவின் உபபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டன. ஆவினுக்கு என உலக அளவில் இருந்த தனிமரியாதையை அ.தி.மு.க அரசு கெடுத்துவிட்டது. விரைவில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு பால் உபபொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

அ.தி.மு.க ஆட்சியில் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு உற்பத்தியிலும், விற்பனையிலும் தலா 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் தினசரி பால் விற்பனையின் அளவு 12 லட்சம் லிட்டரில் இருந்து 15 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. வெளி மாநில பால் விற்பனையிலும் 1 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கால்நடைத் தீவனம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories