தமிழ்நாடு

“மூன்று வாரத்திற்கு முன்பு இருந்த நெருக்கடி தற்போது இல்லை” : அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் மூன்று வாரத்திற்கு முன்பு இருந்த நெருக்கடி தற்போது இல்லை என அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

“மூன்று வாரத்திற்கு முன்பு இருந்த நெருக்கடி தற்போது இல்லை” : அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுமக்கள் முழு ஊரடங்கை முறையாகப் பின்பற்றினால் இன்னும் சீக்கிரமாகவே இரண்டாவது அலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனி வேவல் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தமிழகத்தில் மூன்று வாரத்திற்கு முன்பு இருந்த நெருக்கடியான சூழல் தற்போது இல்லை. முதல்வரின் அதிரடி நடவடிக்கையான தமிழகம் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

அதேபோல், மதுரையிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் குறுகிய காலத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவில்லாமல் கொண்டு வர இயலாத கருப்பு பூஞ்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து வகையிலும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

தடுப்பூசியைப் பொறுத்தவரையில் தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையைக் குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories