தமிழ்நாடு

கொரோனாவை அடுத்து பூஞ்சை நோய்க்கும் மாநிலம் முழுவதும் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது - அமைச்சர் தகவல்!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரும்பூஞ்சை பரிசோதனை மையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

கொரோனாவை அடுத்து பூஞ்சை நோய்க்கும் மாநிலம் முழுவதும் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது - அமைச்சர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரும்பூஞ்சை வைரஸ் தொற்றை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கரும்பூஞ்சை வைரஸ் பரிசோதனை மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை அறிந்துகொள்ளும் டிஜிட்டல் பலகை மற்றும் கரும்பூஞ்சை பரிசோதனை மையத்தில் தொடங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தமிழகத்தில் இதுவரை 518 பேருக்கு கரும்பூஞ்சை வைரஸ் தொற்று உள்ளதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் இந்த வைரஸ் தொற்றாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மருத்துவ வல்லுநர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு வரும் நான்கு லட்சத்தி இருபதாயிரம் கொரோனா தடுப்பு ஊசிகளையும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் எனவும் நாளை தடுப்பூசி அனைத்து மாவட்டங்களிலும் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories