தமிழ்நாடு

HLL நிறுவனம் மெக்கானிக் ஷெட்டா என கேட்ட எல்.முருகனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

மக்களிடம் தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HLL நிறுவனம் மெக்கானிக் ஷெட்டா என கேட்ட எல்.முருகனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் மாநில அரசு தடுப்பூசி தயாரிக்க கோரிய அனுமதிக்கு மத்திய அரசு ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மத்திய அரசு தொகுப்பிலிருந்து கோவிஷீல்ட் 4.2 லட்சம் டோஸ், கோவேக்ஸின் 7,5000 டோஸ்களும் என மொத்தமாக 4,95,570 டோஸ் தடுப்பூசிகள் மாநில தடுப்பூசி மருந்து சேமிப்பு குளிர்பதன நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 1 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 90 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது என்றார். தடுப்பூசி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படுகிறது. முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் தொற்று அதிகம் பாதித்து வரும் மேற்கு மண்டலமான கோவை, ஈரோடு ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக தடுப்புசிகள் வழங்க உள்ளோம். மக்களிடம் தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது என்றார்.

HLL நிறுவனம் மெக்கானிக் ஷெட்டா என கேட்ட எல்.முருகனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் 700 கோடி செலவில் 10 வருடமாக செயல்படமால் உள்ளது. மத்திய அரசு ஒரு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது, அதற்காக காத்திருக்கிறோம் என்றார். மேலும் கொரோன தடுப்பூசியின் தேவை உலகளவில் எழுந்துள்ளது. இந்த சூழலிலும் இதுவரை தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் தேவையான தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

பாஜக தலைவர் எல்.முருகன் செங்கல்பட்டு தடுப்பூசி மையம் உடனே திறப்பதற்கு அது என்ன மெக்கானிக் ஷெட்டா என கேள்வி எழுப்பியது தொடர்பாக பதில் அளித்த அமைச்சர், நாங்களும் அதனை மெக்கானிக் ஷெட் என கூறவில்லை, 10 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் 700 கோடி ரூபாய் செலவில் கட்டிப்பட்ட தடுப்பூசி மையத்தை திறக்க தான் அனுமதி கோருகிறோம் என்றார்.

banner

Related Stories

Related Stories