தமிழ்நாடு

"மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா இல்லாத முதல் மாநிலமாக தமிழகம் திகழும்" : அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்டத்தில் சாலைகள், குடிதண்ணீர், கால்வாய்கள் பணிகள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்போவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா இல்லாத முதல் மாநிலமாக தமிழகம் திகழும்" : அமைச்சர் கே.என்.நேரு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு போர்க்கால நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவம் மட்டும் இல்லாமல் சித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரேனா சிகிச்சைக்காகச் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் உள்ள காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் படுக்கைகளுடன் கூடிய சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சித்த மருந்து பெட்டகத்தைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,"திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் காலியாக உள்ளன. 70 ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளன. தமிழக அரசு மக்கள் நலன் கருதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்தால், இந்தியாவில் நம் தமிழகம் கொரோனா தொற்று இல்லாத முதல் மாநிலமாகத் திகழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

திருச்சி மாநகருக்குத் தண்ணீர் வழங்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன். அதேபோல் பாதாளச் சாக்கடை திட்டம் எங்கு இல்லையோ அங்கெல்லாம் விரைவில் செயல்படுத்தப்படும்.

மழைக் காலத்திற்கு முன்பாக அனைத்துப் பகுதிகளிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதேபோல் வாய்க்கால்களையும் தூர்வாரும் பணிகளைச் செய்ய இருக்கிறோம். புதிய சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்ய இருக்கிறோம்.

தொற்று நோயை ஒழிப்பது மட்டுமல்ல அரசுப் பணி, மக்கள் தேவைகளையும் நிறைவு செய்வதும்தான் எங்களது நோக்கம். விரைவில் சாலைகள், குடிதண்ணீர் வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் செயல்படுத்த உள்ளோம்." எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories