தமிழ்நாடு

புழல் மத்திய சிறையிலிருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு!

புழல் மத்திய சிறையிலிருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

புழல் மத்திய சிறையிலிருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்ட்டு சுமார் 30 ஆண்டு காலமாக ஆயுள் தண்டனை கைதியாக புழல் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ காரணமாக பரோலில் விடுவிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அற்புதம்மாளின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு உரிய விதிகளை தளர்த்தி, 30 நாட்கள் விடுப்பு வழங்க கடந்த 19ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் இன்று காலை பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு ஜோலார்பேட்டை உள்ள அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேரறிவாளனின் பரோல் நடவடிக்கைக்கு உடனடியாக உதவிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பலரும் நன்றித் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories