தமிழ்நாடு

“தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை”- அமைச்சர் எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகளில் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி எச்சரித்துள்ளார்.

“தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை”- அமைச்சர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தனியார் மருத்துவமனைகளில் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி எச்சரித்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் வசதி கொண்ட 131 படுக்கைகள் உள்ளன. இதை 250 படுக்கைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 550 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் வருவதால், மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் கூடுதலாக 650 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

இதில், வரும் 28-ம் தேதி ஆக்சிஜன் வசதி கொண்ட 300 படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இது தவிர, 200 படுக்கைகள் கொண்ட நிரந்தர கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவுறும்போது, மொத்தம் 1,550 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்படும்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் மொத்தம் 3500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அங்கு 1000 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளது. அந்தியூர், பவானி, கோபி, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதி கொண்ட கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பது தொடர்பாக புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு புகார் வருமாயின் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories