தமிழ்நாடு

“100 ரூபாய்க்கு வீட்டுக்கு வீடு காய்கறி தொகுப்பு” : அமைச்சர் ரகுபதியின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!

புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்த கொரோனா கால சிறப்பு நடமாடும் காய்கறி விற்பனை நிலையத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

“100 ரூபாய்க்கு வீட்டுக்கு வீடு காய்கறி தொகுப்பு” : அமைச்சர் ரகுபதியின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு நாளை முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த முழு ஊரடங்குன் போது அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மக்களுக்கு எளிதில் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை துறை மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை மூலமும் நடமாடும் காய்கறி கடைகளை திறந்து பொது மக்களுக்கு அந்தந்த பகுதியில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி 100 ரூபாய்க்கு வீட்டுக்கு வீடு காய்கறி தொகுப்பு வழங்கும் வைத்தார். புதுக்கோட்டையில் இயங்கும் அர்பன கூட்டுறவு ஸ்டோர் மற்றும் டி.வி.எஸ் கூட்டுறவு அங்காடிகளில் இந்த நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை துவக்கி வைத்தார்.

9 காய்கறி வகைகள் கொண்ட இந்த காய்கறி பையின் விலை 100 ரூபாய் என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

banner

Related Stories

Related Stories