இந்தியா

“3வது அலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனக் கூறி மோடி அரசு தப்பிக்க முடியாது” : ப.சிதம்பரம் எச்சரிக்கை!

தடுப்பூசி பணியைத் தீவிரப்படுத்தாவிட்டால் 3வது அலையைத் தடுக்க முடியாது என ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் நாடுமுழுவதும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தடுப்பூசிகளை மத்திய அரசு அதிகமாகக் கொள்முதல் செய்யாததால் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வரை தொடர்ச்சியாக மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தடுப்பூசி பணியைத் தீவிரப்படுத்தாவிட்டால் மூன்றாவது கொரோனா அலையைத் தடுக்க முடியாது என மத்திய அரசை எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டிசம்பர் 31ம் தேதிக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும். ஒட்டுமொத்த பதின்ம வயதினருக்கும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தரவுகளால் தேதி பாதுகாக்கப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் தடுப்பூசி, வெளிநாடுகளில் ஆர்டர் செய்யப்பட்ட எண்ணிக்கை, இறக்குமதி விவரங்கள், இறக்குமதி செய்யப்படும் தேதி ஆகியவை குறித்து புள்ளிவிவரங்கள் தேவை. இதுவரை ஏதும் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை என்பது, தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிடாவிட்டால், மூன்றாவது அலையைத் தடுப்பது சாத்தியமில்லை. இந்த விளைவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என மோடி அரசு கூற முடியாது. அரசுக்கு முறையாக முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடப்பதன் விளைவுகளை ஐ.எம்.எப், உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே எச்சரித்துள்ளன” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories