தமிழ்நாடு

கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய 2 பேர் கைது : சுகாதாரத்துறை அதிரடி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 42 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய 2 பேர் கைது : சுகாதாரத்துறை அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.

ஆங்கங்கே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருபவர்களை போலிஸார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலை மேட்டுகாளியம்மன் கோவில் தெரு பகுதியில், தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மொத்த மருந்து விற்பனை கடை ஒன்றில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையெடுத்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து 42 குப்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய 2 பேர் கைது : சுகாதாரத்துறை அதிரடி!

இதையெடுத்து கடையின் உரிமையாளர் காந்திநகரைச் சேர்ந்த சண்முகம், அவரது சகோதரர் கணேசன் இருவரையும் போலிஸார் கைது செய்து 42 ரெம்டெசிவிர் குப்பிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை, மதுரையில் ரூ16 ஆயிர ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி வந்து 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மதுரை, நெல்லையில் யாரிடம் இவர்கள் மருந்தை வாங்கினார்கள் என்பது குறித்தும், போலிஸார் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories