தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது.. 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிவைப்பு!

ஸ்டெர்லைட் ஆலை இருந்து இன்று முதலாவதாக 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது.. 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிவைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் பொதுமக்களின் போராட்டத்தினால் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தங்கள் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி உற்பத்தி செய்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு அதற்கான அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த நடவடிக்கைக்கும் அனுமதியில்லை என முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 5 ம் தேதி ஆக்சிஜன் உற்பத்திக்காக மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்பத்திக்கான நடவடிக்கைகள் தொடங்கின. கடந்த சில தினங்களாகச் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது.. 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிவைப்பு!

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை பல்வேறு பகுதியில் ஏற்படுவதை அடுத்து உற்பத்தி பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டன.

உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் லாரிகள் மூலமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இருந்து இன்று முதலாவதாக ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் டேங்கர் லாரியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories