தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வெளியானது 33 அமைச்சர்கள் கொண்ட தி.மு.க அமைச்சரவை பட்டியல்!

தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வெளியானது 33 அமைச்சர்கள் கொண்ட தி.மு.க அமைச்சரவை பட்டியல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பில் உள்ள துறைகள்:

பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்.

மற்ற துறைகளுக்கான அமைச்சர்கள் பட்டியல்:

துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர்

கே.என்.நேரு

நகர்ப்புற வளர்ச்சித்துறை

இ.பெரியசாமி

கூட்டுறவுத்துறை

க.பொன்முடி

உயர்கல்வித்துறை

எ.வ.வேலு

பொதுப்பணித் துறை

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண்மைத்துறை

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

வருவாய்த்துறை

தங்கம் தென்னரசு

தொழில் துறை

எஸ்.ரகுபதி

சட்டத்துறை

சு.முத்துசாமி

வீட்டு வசதித்துறை

கே.ஆர்.பெரியகருப்பன்

ஊரக வளர்ச்சித்துறை

தா.மோ.அன்பரசன்

ஊரகத் தொழில்துறை

மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை

கீதா ஜீவன்

சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை

அனிதா ராதாகிருஷ்ணன்

மீன்வளத்துறை - கால்நடை பராமரிப்புத்துறை

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

போக்குவரத்துத் துறை

கா.ராமச்சந்திரன்

வனத்துறை

அர.சக்கரபாணி

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை

வி.செந்தில்பாலாஜி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

ஆர்.காந்தி

கைத்தறி துணிநூல் துறை

மா.சுப்பிரமணியன்

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை

பி.மூர்த்தி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை

எஸ்.எஸ்.சிவசங்கர்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பி.கே.சேகர்பாபு

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை

பழனிவேல் தியாகராஜன்

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை

சா.மு.நாசர்

பால்வளத்துறை

செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித்துறை

சிவ.வீ.மெய்யநாதன்

சுற்றுச்சூழல், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை

சி.வி.கணேசன்

தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை

மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத்துறை

மா.மதிவேந்தன்

சுற்றுலாத்துறை

கயல்விழி செல்வராஜ்

ஆதிதிராவிடர் நலத்துறை

banner

Related Stories

Related Stories