தமிழ்நாடு

முதல்முறையாக அமைச்சராகும் 15 பேர்.. அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் தி.மு.க அமைச்சரவை!

தி.மு.க அமைச்சரவையில் 15 பேர் முதல்முறையாக அமைச்சராகப் பொறுப்பு ஏற்கிறார்கள்.

முதல்முறையாக அமைச்சராகும் 15 பேர்.. அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் தி.மு.க அமைச்சரவை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க அமைச்சரவை பட்டியலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அமைச்சரவையில் 15 பேர் முதல்முறையாக அமைச்சராகப் பொறுப்பு ஏற்கிறார்கள். முதல்முறையாக அமைச்சர் பொறுப்பேற்போர் பட்டியல் பின்வருமாறு:

1 அர.சக்கரபாணி

2 ஆர்.காந்தி

3 மா.சுப்பிரமணியன்

4 பி.மூர்த்தி

5 எஸ்.எஸ்.சிவசங்கர்

6 பி.கே.சேகர்பாபு

7 பழனிவேல் தியாகராஜன்

8 சா.மு.நாசர்

9 செஞ்சி மஸ்தான்

10 அன்பில் மகேஸ் பொய்யாமொழி

11 சிவ.வீ.மெய்யநாதன்

12 சி.வி.கனேசன்

13 மனோ தங்கராஜ்

14 மா.மதிவேந்தன்

15 கயல்விழி செல்வராஜ்

banner

Related Stories

Related Stories