தமிழ்நாடு

“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” : கோவில் நகரங்களில் வென்று பா.ஜ.க-விற்கு விபூதியடித்த தி.மு.க!

தமிழக தேர்தலில் கோவில் நகரங்களில் அதிகம் வெற்றி பெற்று தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” : கோவில் நகரங்களில் வென்று பா.ஜ.க-விற்கு விபூதியடித்த தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றிப் பெற்று ஆட்சியமைக்கிறது. தி.மு.க 125, காங்கிரஸ் 18, ம.தி.மு.க 4, வி.சி.க 4 சி.பி.எம் 2, சி.பி.ஐ 2, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.

இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வினர் தொடர்ச்சியாக தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என அவதூறு பிரச்சாரம் செய்தனர். அதிலும் குறிப்பாகத் தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க தேசிய தலைவர்களின் பேச்சுகளிலும் தி.மு.கவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாகச் சித்தரிக்கும் நெடியே அதிகம் வீசியது.

பா.ஜ.க தலைவர்கள் ‘வேல் யாத்திரை’ என்ற பெயரில், தி.மு.க-விற்கு எதிராக பிம்பத்தைக் கட்டமைக்க முயன்று தோற்றனர்.

ஆனால், அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 'தி.மு.கவில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான். தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை' எனக் கூறினார். அனைத்து மக்களின் நலனுக்காகவும் தி.மு.க ஆட்சி செய்த நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளும் தி.மு.கவை பெரும்பான்மை இந்துக்கள் வெகுவாக ஆதரித்துள்ளார்கள் என்பதை பறைசாற்றியுள்ளது. குறிப்பாக திருத்தணி, திருவெற்றியூர், மயிலாப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், பழனி, கும்பகோணம், மதுரை, சங்கரன்கோவில், திருச்செந்தூர் ஆகிய கோவில் நகரங்களில் வெற்றி பெற்று எப்போதும் தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சியாக இருக்காது என்பதைத் தனது வெற்றியின் மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தொடர்ச்சியாக தி.மு.க மீது மதத்தை அடிப்படையை கொண்டு வைக்கப்பட்ட கருத்துகள் தமிழகத்தில் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories