தமிழ்நாடு

அ.தி.மு.கவை விரட்டி அடித்த தூத்துக்குடி மக்கள்.. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி வெற்றுள்ளனர்.

அ.தி.மு.கவை விரட்டி அடித்த தூத்துக்குடி மக்கள்.. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி வெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் கீதாஜீவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து த.மா.க சார்பில் விஜய் சீலன் போட்டியிட்டார்.

இதில் தி.மு.க வேட்பாளர் கீதாஜீவன் 90ஆயிரத்து 37 வாக்குகள் பெற்றோர் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட த.மா.கவை சேர்ந்த விஜய் சீலன் 41 ஆயிரத்து 537 வாக்குகள் வெற்றி தோல்வி அடைந்தார். இதனையடுத்து 50 ஆயிரத்து 150 வாக்கு வித்தியாசத்தில் கீதாஜீவன் வெற்றி பெற்றார்.

இதுபோல், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 88274 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 63011 வாக்குகள் பெற்றார். இதைத் தொடர்ந்து 25ஆயிரத்து 263 வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்

இதுபோல் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றார். இதில், சண்முகையா 73110 வாக்குகள் பெற்றார். எதிர்த்துபோட்டியிட்ட அ.தி.மு.க மோகன் 64600 வாக்குகளும், டாக்டர் கிருஷ்ணசாமி 6054 வாக்கு பெற்று தோல்வி அடைந்தனர். இதில் தி.மு.க வேட்பாளர் சண்முகையா 8510 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.கவை விரட்டி அடித்த தூத்துக்குடி மக்கள்.. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி!

இதுபோல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட மார்கண்டேயன் வெற்றி பெற்றார். இதில் மார்க்கண்டேயன் 90348 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் 51799 வாக்குகள் பெற்றார். இதைத் தொடர்ந்து தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயன் 38 ஆயிரத்து 549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுபோல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார். ஊர்வசி அமிர்தராஜ்யை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.கவை சேர்ந்த சண்முகநாதன் 59471 வாக்குகள் பெற்றார். இதில் 17372 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகளை தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கோவில்பட்டியில் மட்டும் அ.தி.மு.கவை சேர்ந்த கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்ற தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வழங்கினார்கள். திமுக வெற்றி என்பது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரமும், திமுகவின் தேர்தல் அறிக்கையும் தான் காரணம் எனவும் தி.மு.க தலைவர் முதல்வர் ஆவதற்கு இந்த வெற்றி வழி வகுத்துள்ளது எனவும் இதன் மூலம் தங்கள் தொகுதிகளில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்போம் என வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories