தமிழ்நாடு

முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று 153 பேர் பலி! #CORONAUPDATE

தமிழகத்தில் இன்று கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று 153 பேர் பலி! #CORONAUPDATE
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,43,083 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 20,768 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,07,112 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 17,576 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,72,322 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 153 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 6,078 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,45,966 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories