தமிழ்நாடு

தனிப்பெரும் வெற்றி... ட்விட்டரில் டிரெண்டாகும் #முகஸ்டாலின்எனும்நான் - மகிழ்ச்சியில் தி.மு.க தொண்டர்கள்!

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனிப்பெரும் வெற்றி... ட்விட்டரில் டிரெண்டாகும் #முகஸ்டாலின்எனும்நான் - மகிழ்ச்சியில் தி.மு.க  தொண்டர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 163 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க 70 இடங்களில் முன்னிலையில் வருகிறது. இதனடிப்படையில் பார்த்தால் தி.மு.க ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க ஆட்சி அமைய உள்ளதால் தி.மு.க தொண்டர்கள் உள்ளிட பலர் #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பயன்படுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் முதல்வராகவிருக்கும் தி.மு.க தலைவருக்கு இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தி.மு.கவின் வெற்றியைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், தேஜஸ்வி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories