தமிழ்நாடு

“பா.ஜ.கவுக்கு மரண அடி கொடுத்த தமிழ்நாட்டு வேலன், மே.வங்க காளி, கேரள அய்யப்பன்” - தொல்.திருமாவளவன் பொளேர்!

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க தேர்தல்களில் பா.ஜ.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

“பா.ஜ.கவுக்கு மரண அடி கொடுத்த தமிழ்நாட்டு வேலன், மே.வங்க காளி, கேரள அய்யப்பன்” - தொல்.திருமாவளவன் பொளேர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகவும், அசாமில் மூன்று கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து துவங்கி விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் மீண்டும் ஆளும் கட்சிகளே ஆட்சி அமைக்க உள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.கவை, தோர்கடித்து தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 217 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 163 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் போட்டியிட்ட பா.ஜ.க கடும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அசாம், புதுவை தவிர மே.வங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக'வுக்கும் அதன் அணிக்கும் எதிராக மக்கள் மரணஅடி கொடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வேலன், மே.வங்கம் காளி, கேரளா அய்யப்பன் ஆகியோரின் தீர்ப்புக்கு- படுதோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, அமித்ஷா ஆகியோர் உடனே பதவி_விலக வேண்டும்" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories