தமிழ்நாடு

ரெம்டெசிவருக்காக KMCல் 4வது நாளாக குவியும் நோயாளிகளின் உறவினர்கள்; அலைக்கழிக்கும் சுகாதாரத்துறை?

ரெம்டெசிவர் மருந்தினை வாங்கிச் செல்ல நான்காவது நாளாக இன்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூட்டம் அலைமோதுகிறது.

ரெம்டெசிவருக்காக KMCல் 4வது நாளாக குவியும் நோயாளிகளின் உறவினர்கள்; அலைக்கழிக்கும் சுகாதாரத்துறை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் 80 ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை நடைபெற்று வருகிறது. 100 மில்லி கிராம் கொண்ட மருந்து குப்பியை ஆயிரத்து 545 ரூபாய் என்ற விலையில் உரிய சான்றுகளுடன் வருகிறவர்களில் ஒரு நபருக்கு ஆறு குப்பிகள் என்ற எண்ணிக்கையில் விற்பனை செய்கின்றனர்.

ரெம்டெசிவருக்காக KMCல் 4வது நாளாக குவியும் நோயாளிகளின் உறவினர்கள்; அலைக்கழிக்கும் சுகாதாரத்துறை?

இதற்கிடையில் தங்களது உறவினர்களுக்காக மருந்து வாங்க தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருப்போரிடம் டோக்கன் வினியோகிப்பதில் முறைகேடு, ஒரு சிலருக்கு மட்டும் அதிகவிலைக்கு விதிகளுக்கு புறம்பாக விற்பனை, ஒரே கவுண்டர் மட்டும் உள்ளதால் காத்திருப்போர் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பதும் போன்ற புகார்களும் நேற்று எழுந்தன.

இதையடுத்து மருந்து விற்பனையகமானது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்பட்டு நான்கு கவுண்டர்களுடன் இயங்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் விற்பனையகமானது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனால் 4 கவுண்டர்கள் அமைக்கப்படவில்லை. 2 கவுண்டர்கள் மட்டுமே இயங்குகின்றன. அவற்றிலும் மிகவும் மெதுவாக விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories