தமிழ்நாடு

"வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ய திட்டம்?”- நியாயமாக நடத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக கோரிக்கை!

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தி.மு.க சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

"வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ய திட்டம்?”- நியாயமாக நடத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தி.மு.க வழக்கறிஞர்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் பச்சையப்பன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், “வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் எந்தவித முறைகேடுகளுக்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காமல் முழுமையான பாதுகாப்புடன் எண்ணப்பட வேண்டும்.

தபால் வாக்குகள் மற்றம் இ.வி.எம் வாக்குகள் நேர்மையாகவும் நியாயமாகவும் எந்தவித தவறுகளுக்கும் இடமின்றி வாக்குகள் எண்ணப்பட வேண்டும். 14 மேஜைகளிலும் தனித்தனியாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கையின் போது தெளிவாக வாக்குகளை முகவர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். எந்தவிதமான குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

தபால் வாக்குகளை எண்ணி முடித்த பின்னர் இயந்திர பதிவு வாக்குகள் எண்ணப்படும் என்று இருந்த முறை மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக ஒரு சில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கட்சியினருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய முறையையே பின்பற்ற வேண்டுமென தெரிவித்தோம்.

அதற்கு தேர்தல் ஆணையரும் தபால் வாக்கு மூன்று மணி நேரம் எண்ணிய பிறகே இ.வி.எம் வாக்குகள் எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தற்போது தெரிவித்துள்ளார்.

சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியாளர் ஒருவர் இரண்டு அடையாள அட்டை வைத்துள்ளார். எனவே வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories