தமிழ்நாடு

ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 115% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

நாடுமுழுவதும் விலைவாசி அதிகரித்துள்ள சூழலில் உணவுக்கு பயன்படுத்தபடும் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கபோவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 115% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக தனது வழக்கமான பொய்வாக்குறுதிகளை இந்த முறையும் அறிவித்தது. அந்தவகையில், பா.ஜ.க அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்பதுதான்.

ஆனால் பா.ஜ.க அளித்த வாக்குறுதிகளை எப்போதுமே நிறைவேற்றாது என்பதற்கு தற்போது அதிகரித்து வரும் விலைவாசியே மிகப்பெரிய சாட்சி. மக்களின் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது விலை உயர்வைக் கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்து அதற்கு நேர்மாறாக மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மூலம் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்த மறுவாரமே எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 115% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

அவ்வாறு, விலை உயர்ந்த பொருட்கள் பட்டியலில் மிக முக்கியமானது சமையல் எண்ணெய். இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களின் உணவு முறைகளில் வெங்காயம் இன்றி சமைப்பது கிடையாது. இத்தகைய சூழலில் சமையல் எண்ணெய் விலையுயர்வு சாமானிய மக்களை வாட்டி வதக்கியுள்ளது.

இந்த விலையுர்வுக்கு மோடி அரசின் மோசமான பொருளாதார நடவடிக்கையே காரணம் எனக் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த ஓர் ஆண்டில் எண்ணெயின் விலை 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் இறக்கிமதி செய்யப்பட்ட எண்ணெய்களை இந்தியாவில் பெரும்பாலன மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், உலகளவில் மலேசியாவில் பாமாயிலும், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் சூரியகாந்தி எண்ணெய்யும், ரஷ்யா, உக்ரைன் நாடுகளிலிருந்து கச்சா சமையல் எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 115% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

குறிப்பாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில் லிட்டர் ரூபாய் 75 முதல் ரூபாய் 80க்கு விற்றது. தற்போது அதே எண்ணெய் ரூ.150 முதல் 165 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சராசரியாக 115 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற உள் நாட்டு எண்ணெய் வகைகளின் விலையும் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சமையல் எண்ணெய் வியாபாரி ஒருவர் கூறுகையில், “உலகளவில் கடந்த சில மாதங்களாக எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் செலவு அதிகரிப்பால் மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைத்துள்ளது. இதன் காரணமாகவே எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள் உபயோகப்படுத்தும் பாமாயில் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது.

எனவே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இறக்குமதியை அதிகப்படுத்த வேண்டும். மேலும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க ேவண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சமையல் எண்ெணய் விலை குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories