தமிழ்நாடு

“20 நாட்களில் 12 ஆயிரம் கி.மீட்டர் தூரம் சூறாவளி பிரச்சாரம்” : வெற்றியை உறுதி செய்த தலைவர் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவுபெற்றது.

“20 நாட்களில் 12 ஆயிரம் கி.மீட்டர் தூரம் சூறாவளி பிரச்சாரம்” : வெற்றியை உறுதி செய்த தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் நாளை மறுதினம் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய இறுதிநாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்து களம் காண்கிறார். தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததிலிருந்த தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டனர்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி இன்று கொளத்தூரில் பிரச்சாரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார். கடந்த 20 நாட்களாகத் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

“20 நாட்களில் 12 ஆயிரம் கி.மீட்டர் தூரம் சூறாவளி பிரச்சாரம்” : வெற்றியை உறுதி செய்த தலைவர் மு.க.ஸ்டாலின்!
Kalaignar TV

இந்த பிரச்சாரங்களின் போது, அ.தி.மு.கவின் 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார். மேலும் தி.மு.கவின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையின் வாக்குறிதிகளை வீதி, வீதியாகத் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

அதேபோல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பியும் தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்கள் அவர்களை உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். மக்களின் ஆதரவைப் பார்த்து மு.க.ஸ்டாலின் இது வெற்றி விழா கூட்டமா அல்லது பிரச்சார கூட்டமா என நெகிழ்ந்தார். இப்படி தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலைவர்களின் பிரச்சாரம் ஓய்ந்தாலும் கட்சி தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories