தமிழ்நாடு

குடிக்க தண்ணீர் கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் திட்டிய பாஜகவினர்: மோடி கூட்டத்தைப் புறக்கணித்த நிரூபர்கள்

மதுரையில் பிரதமர் மோடி நிகழ்வை புறக்கணிக்க ஊடகத்தினர் முடிவு செய்துள்ளனர்

குடிக்க தண்ணீர் கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் திட்டிய பாஜகவினர்: மோடி கூட்டத்தைப் புறக்கணித்த நிரூபர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதற்கு மீடியாவை யார் வர சொன்னது என்று பா.ஜ.கவினர் கேட்டதால் பாஜகவினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் 3 மணிநேரமாக காத்திருந்த செய்தியாளர்கள் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு பாஜகவினர் மீடியாவை யார் வர சொன்னது என்று கேட்டதால் பாஜகவினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம்

செய்தியாளர்களை பா.ஜனதா நிர்வாகி ஒருவர் அவமரியாதையாக பேசியதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் வெளியே போங்க என்று கூறிய நிர்வாகிகளுக்கும் செய்தியாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அடுத்து பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பாரதிய ஜனதாவின் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories