தமிழ்நாடு

மருத்துவர் ராமதாசின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் : காடுவெட்டி குருவின் மகள் ஆவேசம்!

வடக்கு மருத்துவர் ராமதாசின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாசின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் : காடுவெட்டி குருவின் மகள் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் போட்டியிடும் தா.உதயசூரியனை ஆதரித்து வானியந்தல் கிராமத்தில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோர் காடுவெட்டி குருவிற்கு பா.ம.க நிறுவனர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் இழைத்த துரோகத்தையும், வன்னிய சமுதாய மக்களை வஞ்சித்து வருவதையும் சுட்டி காட்டி தி.மு.க வேட்பாளர் உதயசூரியனுக்கு, இருவரும் வாக்குகள் சேகரித்தனர்.

அப்போது விருத்தாம்பிகை பேசுகையில், “பெண்கள் பாதுகாப்பு மற்றும் இலவச கல்வி, மது விலக்கு குறித்து பேசி வரும் ராமதாஸ், அன்புமணி இருவரும் நாங்கள் எங்கள் சமுதாய மக்களிடம் மறைந்த குருவிற்கு செய்த துரோகத்தை விளக்கி கூறி, நீதி கேட்க செல்லும் இடங்களில் எல்லாம், பா.ம.கவினர் குடித்துவிட்டு வந்து எங்களை வழிமறித்து.” சின்னய்யா பெரியய்யாவை பற்றியும் கட்சியை பற்றியும் பேசக்கூடாது” ஒரு பெண் என்று கூட பாராமல் தன்னிடம் ரகளையில் ஈடுபடுகின்றனர்.

இது தான் அவர்கள் பெண்கள் பாதுகாப்பிற்கு செலுத்தும் அக்கறையா? இலவச கல்வி வழங்குவோம் எனக் கூறும் அவர்கள் வன்னியர் சமுதாய மக்களிடம் கோடி கணக்கில் வசூல் செய்து உருவாக்கப்பட்ட வன்னியர் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் தங்கள் சமுதாய பிள்ளைகளிடமே ரூ.3 லட்சம் நன்கொடை கேட்கிறார்கள்.

மேலும் அறக்கட்டளை தற்போது தங்கள் பெயரிலேயே மாற்றி விட்டார்கள். மேலும், வடக்கு மருத்துவர் ராமதாசின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். பா.ம.க போட்டியிடும் ஒரு தொகுதியில் கூட அவர்களால் வெற்றி பெற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories