தமிழ்நாடு

“தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தவே மோடி, அமித்ஷா, யோகி உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்”: டி.ராஜா குற்றச்சாட்டு!

உ.பி மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு கலவரத்தை தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் என்றுதான் பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளார்கள் என டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தவே மோடி, அமித்ஷா, யோகி உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்”: டி.ராஜா குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை ஆதரித்து வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா பேசுகளையில், “பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு அணி வெற்றி பெறும்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது மட்டுமல்ல, அகில இந்திய அளவில் மக்கள் விரோத கொள்கைகளை பின்பற்றுகின்ற மோடி அரசிற்கு முடிவு கட்டுவதற்கான தொடக்கமாக இந்த தேர்தல் தீர்ப்பு அமையும். தமிழக மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணிக்கு ஒரு பேரலை உருவாகி சாதகமாக உள்ளது.

“தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தவே மோடி, அமித்ஷா, யோகி உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்”: டி.ராஜா குற்றச்சாட்டு!

அப்படிப்பட்ட ஒரு கலவரத்தை தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் என்றுதான் பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளார்கள். கோவையில் நடைபெற்ற சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவினர். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories