தமிழ்நாடு

“தி.மு.கவினரை முடிந்தால் தொட்டுப்பார் தம்பி” : ஆட்டுக்கார தம்பி அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி சவால்!

“பா.ஜ.கவின் அண்ணாமலை, செந்தில் பாலஜிய அடிச்சிருவேனு சொல்றாரு. செந்தில் பாலாஜி மேல் கைவச்சிபாரு தம்பி. தி.மு.க உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது” என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

“தி.மு.கவினரை முடிந்தால் தொட்டுப்பார் தம்பி” : ஆட்டுக்கார தம்பி அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி சவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், வேட்பாளர்களின் பிரச்சார பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.

அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது. மேலும், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதேபோல் அ.தி.மு.க தொண்டர்களும் பா.ஜ.க மீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க வேட்பாளர்கள் பற்றி பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினர் அவதூறு குட்டச்சாட்டுகளையும், மிரட்டல்களையும் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பாகப் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தோல்வி பயத்தில் பிரசாரத்தின்போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார்.

“தி.மு.கவினரை முடிந்தால் தொட்டுப்பார் தம்பி” : ஆட்டுக்கார தம்பி அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி சவால்!

நேற்று முன் தினம் கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணாமலை “தூக்கிப்போட்டு மிதிச்சேன்னா பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். தேர்தல் ஆணையத்தைப் பார்த்தெல்லாம் பயப்படமாட்டேன்.” என வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான பா.ஜ.க-வின் அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் தி.மு.க வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி நேற்று தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “துணை முதல்வர் தொகுதியிலேயே எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.

“தி.மு.கவினரை முடிந்தால் தொட்டுப்பார் தம்பி” : ஆட்டுக்கார தம்பி அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி சவால்!

மேலும் பேசிய கனிமொழி எம்.பி, “அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, பிரச்சாரம் செய்யும்போது எனக்கு இன்னொரு முகம் இருக்குனு என்று சொல்கிறார். அண்ணாமலை என்று பெயர் இருப்பதால் அவருக்கு ரஜினி என்ற நினைப்பு போல. “செந்தில் பாலஜிய அடிச்சிருவேனு சொல்றாரு. செந்தில் பாலாஜி மேல் கைவச்சிபாரு தம்பி”.

தி.மு.க உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. இது தமிழ்நாடு. இங்கு வச்சுக்க வேண்டாம், எங்கே யார், எதை பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும்; நாவடக்கம் வேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories