தமிழ்நாடு

யோகி வருகையின் போது வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் - வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்யக்கோரி புகார் மனு!

கோவை தெற்கு தொகுதியில் வன்முறையில் ஈடுபட உறுதுணையாக இருந்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யோகி வருகையின் போது வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் - வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்யக்கோரி புகார் மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு பகுதிகளில் பிரச்சாரம் செய்த போது கடைகளை அடைக்க சொல்லி வன்முறையில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய கூறி தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் இந்திய தவ்ஹீத் ஜமாத் நேரில் புகார் மனு அளித்தனர் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் முகமது ஷிப்லி, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நேற்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். அப்போது பா.ஜ.க தொண்டர்கள் கோவை டவுன்ஹால் மற்றும் பல்வேறு பகுதிகளிலுள்ள கடைகளை மூட சொல்லி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதை தடுத்த காவல்துறையினர் மீது பா.ஜ.கவினர் கடுமையாக தாக்கினர். இது போன்ற வன்முறை மூலம் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என பா.ஜ.க எண்ணுகிறது.

தேர்தல் விதிமுறையை மீறி வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.கவினரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு துணையாக இருந்த கோவை தெற்கு பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு கொடுத்ததாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories