தமிழ்நாடு

‘ஆர்டர் போடாத நீ..’ : நேரலையில் பெண் நெறியாளரை நோக்கி அநாகரீகமாகப் பேசிய பா.ஜ.க நாராயணன்!

தனியார் செய்தி தொலைக்காட்சி விவாதத்தின் போது நெறியாளரைப் பார்த்து பா.ஜ.க-வின் நாராயணன் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆர்டர் போடாத நீ..’ : நேரலையில் பெண் நெறியாளரை நோக்கி அநாகரீகமாகப் பேசிய பா.ஜ.க நாராயணன்!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வரும் ஏப்ரம் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், முகமூடி அணிந்த பா.ஜ.கவே அ.தி.மு.க என்றும் முகமூடியை கழிற்றினால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தெரியும் எனவும் பேசியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்று, ராகுலின் கருத்து விமர்சனமா? வெறுப்பரசியலா? என்ற தலைப்பில் விவாதம் நடத்தியது.

இந்த விவாதத்தில், பா.ஜ.கவை சேர்ந்த நாராயணன் பங்கேற்றிருந்தார். அப்போது நாராயணன் விவாதத்திற்கான தலைப்பை ஒட்டி பேசாமல், தி.மு.க மீது காழ்ப்புணர்வைக் கொட்டிக் கொண்டிருந்தார்.

இதனால், விவாதத்தைத் தொகுத்து வழங்கிய பெண் நெறியாளர், விவாத தலைப்பிலிருந்து பேசுங்கள் எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன், 'நீ எனக்கு ஆர்டர் எல்லாம் போடாத, நான் பேசுவேன்' என்றார். இதற்கு நெறியாளர், 'நான் ஆர்டர் எல்லாம் போடல சார், தலைப்பிலிருந்து பேசுங்கள் என்றேன்' என்கிறார். மீண்டும் நாராயணன் 'நீ ஆர்டர் போடாத நான் பேசுவேன்' எனக் கூறினார்.

பா.ஜ.க நாராயணன் தொலைக்காட்சி விவாதங்களின்போது, நெறியாளர்களையும், விவாதத்தில் பங்கேற்றும் எதிர்தரப்பினரையும் இதேபோல் ஒருமையில் பேசி அவமதிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பல விருந்தினர்கள் நாராயணன் பங்கேற்கும் விவாதத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories