தமிழ்நாடு

“மோடி-அமித்ஷா தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது, கருகித்தான் போகும்” : பாலகிருஷ்ணன் ஆவேசம்!

தமிழ்நாட்டிற்கு மோடி எத்தனை முறை வந்தாலும் தாமரை மலராது கருகித்தான் போகும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“மோடி-அமித்ஷா தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது, கருகித்தான் போகும்” : பாலகிருஷ்ணன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்துவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவை ஒட்டுமொத்தமாக அம்பானிக்கும் அதானிக்கும் விற்றுவருகிறார் பிரதமர் மோடி. தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில், பா.ஜ.க படுதோல்வியைச் சந்திக்கும் நிலையில்தான் உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைப் பார்த்தாலே பா.ஜ.கவிற்கு ஓட்டுப் போடக்கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது.

எடப்பாடிக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் ஆலை முதலாளிகள் வைத்துள்ள பாக்கி 2500 கோடி ரூபாய் விவசாயிகளிடம் வாங்கிக் கொடுக்க முடியுமா? எட்டு வழிச்சாலையினால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தெரிந்து அதனை நிறுத்தி வைக்கச் சொன்ன உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இருக்கக்கூடிய நல்ல எண்ணம் கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. 8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் விவசாயிகளை அழித்தே தீருவேன் எனக் கூறும் நீங்களா விவசாயி?

“மோடி-அமித்ஷா தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது, கருகித்தான் போகும்” : பாலகிருஷ்ணன் ஆவேசம்!

ஜெயலலிதா ரத்து செய்த கெயில் குழாய் பதிக்கும் திட்டத்தை மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா ஆட்சி எனக் கூறும் நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள். தமிழக வரலாற்றிலேயே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாருமில்லை.

234 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.கவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை. மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் சரி, அமித்ஷா தலைகீழாக நடந்தாலும் சரி, தமிழ்நாட்டில் தாமரை மலராது கருகித்தான் போகும்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேறுவதற்கு அ.தி.மு.கவும், பா.ம.கவும்தான் காரணம். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்துவோம் என்று கூறுகிறது. இது யாரை ஏமாற்றும் வேலை? தி.மு.க கூட்டணி தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட கூட்டணி. அதனால் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க அணி வெற்றிபெறக்கூடாது. மக்களவைத் தேர்தலைவிட மோசமான தோல்வியை அ.தி.மு.க கூட்டணி சந்திக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories