தமிழ்நாடு

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டாலும், அது பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போடுவதாகதான் அர்த்தம்: தொல்.திருமாவளவன் பேச்சு

அ.தி.மு.கவின் பெரியாரிய கொள்கை, எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் 100% நீர்த்துவிட்டது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டாலும், அது பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போடுவதாகதான் அர்த்தம்: தொல்.திருமாவளவன் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளரான மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லாவை ஆதரித்தும், கும்பகோணத்தில் தி.மு.க வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகனை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்ட பின், திருவிடைமருதூர் தி.மு.க வேட்பாளர் கோவி.செழியனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் சராசரியான தேர்தல் அல்ல, மதவாத கொள்கை, சாதிய கொள்கைக்கு எதிராக நடைபெறும் தேர்தல். தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் அதிகாரப் போட்டி என்று நாம் எண்ணிவிடக்கூடாது.

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டாலும், அது பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போடுவதாகதான் அர்த்தம்: தொல்.திருமாவளவன் பேச்சு

தி.மு.க கூட்டணியை, மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையில் கூட்டணி அமைத்து வழிநடத்தி வந்து கொண்டிருக்கிறார். கொரோனா காலத்திலும் பல்வேறு போராட்டங்களில் நாங்கள் கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறோம். பா.ஜ.க சராசரி அரசியல் கட்சி அல்ல; பா.ஜ.கவை இயக்குவது பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கம். காந்தியடிகளை சுட்டுக் கொன்ற இயக்கம். சர்தார் வல்லபாய் பட்டேலால் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்.

டெல்டா மாவட்டங்களை அளிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என ஒருபோதும் பா.ஜ.க பேசியது கிடையாது. அவர்கள் பேசுவதெல்லாம் இந்து- முஸ்லிம், கிருஸ்தவர்கள் என்றுதான் பேசுவார்கள். அ.தி.மு.கவின் பெரியாரிய கொள்கை, எம்.ஜி.ஆர் பதவி ஏற்றதும் 50% நீர்த்துப் போய்விட்டது. ஜெயலலிதா பதவியேற்ற பின் 75% நீர்த்துவிட்டது. தற்போது எடப்பாடி பொறுப்பேற்றதும் 100% நீர்த்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள மாம்பழம், தாமரை, இரட்டை இலை மூன்றுமே பா.ஜ.கவின் சின்னம்தான். மாம்பழத்திற்கு ஓட்டு போட்டாலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டாலும், அது பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போடுவதாகதான் அர்த்தம். அ.தி.மு.க முற்றிலுமாக உருமாறி பா.ஜ.க.வின் பினாமி கட்சியாகி விட்டது. ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்தாலும் மக்கள் இந்த முறை மாற்றித்தான் வாக்களிக்கப் போகிறார்கள். அ.தி.மு.கவால் பாஜகவிடம் தமிழ்நாடு அடகு வைக்கப்பட்டு விட்டது ,அதனை மீட்கக் கூடிய வலிமை தி.மு.கவிற்கு தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories