தமிழ்நாடு

“பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகள் : அதிமுகவால் அபாயத்தில் மாநில வளர்ச்சி” ஷாக் ரிப்போர்ட்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கோட்பாடு அபாயத்தை சந்தித்து வருகிறது என தி இந்து நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகள் : அதிமுகவால் அபாயத்தில் மாநில வளர்ச்சி” ஷாக் ரிப்போர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

The Hindu (25.03.2020) நாளிதழின் நடுப்பக்கத்தில் Tamilnadu's distinct growth path is in peril என கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதில் இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி எல்லோரையும் உள்ளடக்கியதாக, எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என விவரிக்கிறது இந்தக் கட்டுரை. அந்த வளர்ச்சிக் கோட்பாடு எப்படி இன்றைக்கு அபாயத்தில் இருக்கிறது என்பதையும் கட்டுரை சொல்கிறது.

இந்தக் கட்டுரையை சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிவரும் பேராசிரியர்கள் ஏ. கலையரசன் மற்றும் எம். விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்து தீட்டியிருக்கிறார்கள்

கட்டுரையிலிருந்து சில தகவல்கள்:

1. இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வு உருவெடுத்திருக்கிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் வளர்ச்சியைச் சந்திக்கும் மாநிலம், மற்றொரு விஷயத்தில் கோட்டை விடுகிறது. உதாரணமாக, இமாச்சல பிரதேசமும் கேரளாவும் மனிதவளக் குறியீடுகளில் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், உற்பத்தி பொருளாதாரத்தில் பின்னடைந்திருக்கின்றன. மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் துடிப்பான உற்பத்தி இருக்கிறது. ஆனால், மனித வளக் குறியீடுகள் மேம்படவில்லை.

2. ஆனால், இந்த விஷயத்தில்தான் தமிழ்நாடு மாறுபட்டு நிற்கிறது. துடிப்பான உற்பத்தி பொருளாதாரத்தோடு, நல்ல மனிதவளக் குறியீடுகளும் இருக்கின்றன. இந்த மாநிலத்தில் உள்ள அரசியல் சூழல் இதற்கு முக்கியமான காரணம்.

3. மாநிலத்தின் திராவிட அணி திரட்டல் என்பது இரண்டு விதமான கொள்கைகளை இங்கே நிலைக்கச் செய்துவிட்டது. ஒன்று - பொருளாதார ரீதியில் மக்களுக்கான நடவடிக்கைகள். மற்றொன்று - சமூக ரீதியில் மக்களுக்கான நடவடிக்கைகள். சமூக ரீதியிலான நடவடிக்கையைப் பொறுத்தவரை, இட ஒதுக்கீடு, நிலச் சீர்திருத்தம், பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, மக்களிடம் உள்ள வறுமையை மனதில் கொண்டு அளிக்கப்பட்ட உணவு மற்றும் கல்விக்கான மானியங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

“பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகள் : அதிமுகவால் அபாயத்தில் மாநில வளர்ச்சி” ஷாக் ரிப்போர்ட்!

4. இந்தியாவின் மனித வளக் கொள்கைகள் எப்போதுமே உயர் வர்க்கத்தினருக்கு சாதகமாக இருப்பதாக மைரோன் வெய்னர் போன்ற அறிஞர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் அடிப்படைக் கல்வியை விட சிலர் மட்டும் படிக்கும் உயர் கல்விக்கு அதிக பணம் செலவிடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இம்மாநிலத்தை இந்தியாவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

5. 1950களிலிருந்தே அடிப்படைக் கல்விக்கு தமிழ்நாடு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிறகு மெல்ல மெல்ல உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தது. நீதிக்கட்சியின் ஆட்சியில் துவங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகள், இலவச போக்குவரத்து வசதிகள் ஆகியவை கல்வியை எல்லோருக்குமானதாக்கியிருக்கிறது. ஒருவர் அடிப்படைக் கல்விக்காக செலவழிப்பது இந்தியாவிலேயே இங்குதான் குறைவு.

6. உயர் கல்வியைப் பொறுத்தவரை மிகச் சிறந்த கட்டமைப்பை உருவாக்கியிருப்பதோடு, இதில் அளிக்கப்படும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியலினத்தவருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முயல்கிறது.

7. சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால், தாய் - சேய் இறப்பு விகிதம் இங்கு மிகக் குறைவு. சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக தொடர்ந்து செயல்பட்டதன் விளைவு இது. நாட்டிலேயே முதல் முறையாக மாநிலத்திற்கான திட்டக் கமிஷன் இங்குதான் உருவாக்கப்பட்டது. சுகாதாரக் கட்டமைப்புக்கான முதலீடுகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

8. தனித்தனி அமைப்புகள், சேவைகளின் மூலம் மக்களின் குறிப்பான சுகாதாரத் தேவைகள் எதிர்கொள்ளப்பட்டன. உதாரணமாக தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் மூலம் அடிப்படையான மருந்துகள், பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்பட்டன. இதனால், இந்தியாவில் சுகாதாரத்திற்காக தனிநபர் செலவு செய்வது இங்குதான் குறைவு.

9. அரசு தரும் பொருளாதாரச் சலுகைகளை பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வெறுமனே அனுபவிக்கிறார்கள்; ஏதும் செய்வதில்லை என்ற பார்வை உண்டு. ஆனால், எங்களுடைய ஆய்வு இதனைப் பொய்ப்பித்தது. மகாராஷ்டிரா, குஜராத்தோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டில்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர் அதிகம்.

10. நீண்ட காலமாக தமிழ்நாடு உயர்கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்திருந்ததால் தொழில்நுட்பக் கல்வி பயின்ற, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேலே வந்தார்கள். அதேபோல, தொழிலாளர்களின் நலன்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில்தான் கூலியும் சமூகப் பாதுகாப்பும் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் சிறப்பாக இருந்தது.

11. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பணியிடத்திற்கு வெளியில் இருந்த சமூகப் பாதுகாப்பு.

12. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது, மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைப்பது ஆகியவற்றால் இந்த நிலை தற்போது அபாயத்திற்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் கோரிக்கையை செயல்படுத்த முடியாமல் போகிறது. நீட் தேர்வு இதற்கு ஒரு உதாரணம். பல இடங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அரசின் சமூக நலத் திட்டங்கள் போதாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் - தி இந்து

தமிழாக்கம் - முரளிதரன்.கா

banner

Related Stories

Related Stories