தமிழ்நாடு

மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி முகமது ஜான் மறைவுக்கு தி.மு.க தலைவர் இரங்கல்!

அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி முகமது ஜான் மறைவுக்கு தி.மு.க தலைவர் இரங்கல்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார்.

2011-2016 அ.தி.மு.க ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய முகமது ஜான், கடந்த 2019ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ராணிப்பேட்டையில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த அவர், இன்று மதியம் வீட்டில் ஓய்வெடுத்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காலமானார்.

மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பு வருமாறு :

“அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சராக - தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து சீர்மிகு பணியாற்றியவர். மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த அவரது மறைவு - தமிழக மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories