தமிழ்நாடு

தேர்தல் பரப்புரைக்கிடையே தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உடல்நலக்குறைவால் மறைந்த குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தேர்தல் பரப்புரைக்கிடையே தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘ரேனிகுண்டா’, ‘தென்மேற்கு பருவக்காற்று’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சினிமா துறை முடங்கி, படங்கள் எதுவும் இல்லாததால் வறுமையில் தவித்து வந்துள்ளார் தீப்பெட்டி கணேசன். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலைக் குறைவு காரணமாக தீப்பெட்டி கணேசன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திறைத்துறையைச் சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று தீப்பெட்டி கணேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தீப்பெட்டி கணேசனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது மறைவால் வேதனையுற்ற அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எளிய பின்னணியிலிருந்து தடைகள் பல கடந்து தன்னம்பிக்கையை மூலதனமாக்கி திரைத்துறைக்கு வந்தவர் சகோதரர் தீப்பெட்டி கணேசன். அவரின் மரணச்செய்தி கடும் அதிர்ச்சியை தந்தது. மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள கணேசனின் இல்லம்சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories