சினிமா

தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ : ஷூட்டிங்கில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ : ஷூட்டிங்கில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜாயன் - சூரஜ் வெஞ்சாரமூடு நடித்து நேரடியாக நீ ஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாளப்படம் `தி க்ரேட் இந்தியன் கிச்சன்'.

பெண் அடிமைத்தனத்தைப் பற்றி முகத்தில் அறையும் வண்ணம் கூறியிருந்த இந்தப் படம் பலராலும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பேச்சும் எழுந்தது.

அதைத் தொடர்ந்து இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, தானே தயாரித்து, இயக்கப்போவதாக அறிவித்தார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ : ஷூட்டிங்கில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கூடவே இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் படி அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி இருக்கிறது. இந்தப் படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குநர் ஆர் கண்ணன் இதற்கு முன்பு ஜப் வி மெட் படத்தின் தமிழ் ரீமேக்கையும், டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்கையும் இயக்கியிருக்கிறார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories