தமிழ்நாடு

இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது தி.மு.க தேர்தல் அறிக்கை !

தி.மு.க தேர்தல் அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது.

இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது தி.மு.க தேர்தல் அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.

இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.

இதனிடையே நேற்றைய தினம் 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது. இந்த தேர்தல் அறிக்கையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேளாண் துறை, மருத்துவப்படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories