தமிழ்நாடு

’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி

“என் தரப்பிலிருந்து எந்த சமரசமும் இல்லை. நீதிக்கான போராட்டம் சமரசமின்றி தொடரும்.” எனத் தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர் குணசேகரன்.

’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் காலுன்றுவதற்காக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல குறுக்கு வழிகளைக் கையில் எடுத்து வருகின்றன. குறிப்பாக கருத்தியல் ரீதியாக பதில் பேச முடியாத வலதுசாரிகள், பின்பற்றும் ஒரே யுக்தி பொய்ச் செய்திகளை பரப்புவதுதான்.

அதன்படி, ஒரு பொய்யை பலமுறை கூறினால் உண்மையாக்கி விடலாம் என்பதே அவர்களின் அற்ப அரசியல் கொள்கையாக உள்ளது. அப்படி திட்டமிட்டு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதற்கும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதற்கும் சில மோசடியாளர்களை பா.ஜ.க களம் இறக்கியுள்ளது.

அப்படி திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புவதற்கு களம் இறக்கப்பட்டவர்களில், முதன்மையான மோசடியாளர் மாரிதாஸ். மாரிதாஸ் பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை அவதூறாகச் சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி

அந்த வீடியோவில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முன்னாள் முதன்மை ஆசிரியரான குணசேகரன் பற்றியும் மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் மற்றும் மூத்த செய்தியாளர் அசீப் உள்ளிட்டோர் குறித்தும் அவதூறாக வீடியோக்களை வெளியிட்டார்.

மேலும், அந்த வீடியோக்களில், நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணிபுரியும் பெரும்பாலானோர் திராவிடர் கழகம் மற்றும் தி.மு.கவின் பின்னணியில் செயல்படுவதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்நிலையில், தங்களுடைய நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட மாரிதாஸிடம் 1.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேலும், செய்தியாளர்கள் குறித்த தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூஸ்18 நிறுவனம் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறி போலி மின்னஞ்சல் செய்தியை வெளியிட்டும் மாரிதாஸ் மோசடி செய்தது குறித்து சென்னை சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி

இந்நிலையில் கடந்த முறை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, தன்னுடைய யூ- டியூப் சேனலின் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக நியூஸ்18 தொலைக்காட்சி மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்பியது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்திற்கும் மாரிதாஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதால் நஷ்ட ஈடாக 1.5 கோடி ரூபாய் வழங்க மாரிதாஸுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய செயலுக்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நியூஸ் 18 தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட மாரிதாஸுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாரிதாஸிடமிருந்து மன்னிப்பு கேட்டு சமரசம் செய்வதற்கான நிபந்தனைகளைப் பெற்றுள்ளதாக நியூஸ் 18 நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முன்னாள் முதன்மை ஆசிரியர் குணசேகரன் சமரசத்திற்கு தயாராக இருக்கிறாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் குணசேகரன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் தரப்பிலிருந்து எந்த சமரசமும் இல்லை. தீங்கிழைக்கும் அவதூறு நோக்கம் கொண்ட செயல்களுக்கு நான் பலியானேன். எனவே அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் எதிரான, நீதிக்கான போராட்டம் சமரசமின்றி தொடரும். உங்கள் பேரன்புக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். குணசேகரனின் இத்தகைய பதிவு மூலம் மாரிதாஸ் மீது விரைவில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

banner

Related Stories

Related Stories