தமிழ்நாடு

உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : மென்பொருள் நிறுவன ஊழியர் கைது!

உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர் கைது.

உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : மென்பொருள் நிறுவன ஊழியர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தரமணி, அசென்டாஸ் சாலையில் உலக வங்கி கிளை உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக சரத் சந்தர் (41) பணியாற்றி வருகிறார். இவர் உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றி பணம் வசூலிப்பதாக பெண் ஒருவர் இ-மெயில் மூலம் தன்னிடம் தெரிவித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை ஜாபர்கான்பேட்டை, எஸ்.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி (39) என்பவர் ஏமாற்றி வருவது தெரியவந்தது.

உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : மென்பொருள் நிறுவன ஊழியர் கைது!

இதையடுத்து போலிஸார் நேற்று அந்தோணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்தோணி உலக வங்கி கிளைக்கு அருகில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் இவர் பலரிடம் தான் உலக வங்கியில் வேலை செய்வதாகக் பொய் கூறி அதே வங்கியில் வேலை வாங்கித் தருவதாகப் பலரை ஏமாற்றியிருக்கிறார்.

சமீபத்தில் தரமணியை சேர்ந்த ஒரு பெண்ணிடமும் வேலை வழங்குவதாக கூறி நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றியதாகவும்    தெரியவித்தார்.  மேலும் இவர் மீது ஏற்கனவே பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து எத்தனை பேரிடம் உலக வாங்கியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி உள்ளார் என்பது குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories