தமிழ்நாடு

கோயிலில் மோடி காலண்டர்களை விநியோகித்த பா.ஜ.கவினர்: போட்டி போட்டு தேர்தல் விதிகளை மீறும் அ.தி.மு.க-பா.ஜ.க!

குமாரபாளையத்தில், பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவந்த பா.ஜ.க காலண்டர்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

கோயிலில் மோடி காலண்டர்களை விநியோகித்த பா.ஜ.கவினர்: போட்டி போட்டு தேர்தல் விதிகளை மீறும் அ.தி.மு.க-பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை காண அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த பா.ஜ.கவினர், கட்சி சின்னமான தாமரை, பிரதமர் மோடி படங்கள் அச்சிட்ட காலண்டர்களை நேற்று இலவசமாக மக்களுக்கு வழங்கினர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கட்சி தலைவர்கள் படங்கள் உள்ள காலண்டர்களை விநியோகிக்கக்கூடாது எனக் கூறி, 900 காலண்டர்களை பறிமுதல் செய்தனர். காலண்டர்களை விநியோகம் செய்த பா.ஜ.க நகர துணைத் தலைவர் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ராமநாதபுரம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உத்தர பிரதேசம், நாகாலாந்தில் இருந்து வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இந்த லாரிகளில் மறைந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் ஒட்டப்பட்ட புத்தகப்பைகள் இருந்தன. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் புத்தகப்பைகளை பறிமுதல் செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories