தமிழ்நாடு

“பாட்டு பாடு, கையைப் பிடி” : பெண் IPSக்கு காரில் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் - அதிர்ச்சியைக் கிளப்பிய FIR

டெல்டா மாவட்ட பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ்தாஸ் குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருகிறது.

“பாட்டு பாடு, கையைப் பிடி” : பெண் IPSக்கு காரில்  தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் - அதிர்ச்சியைக் கிளப்பிய FIR
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சரின் சுற்றுப்பயணத்துக்கான பாதுகாப்புக்காக சென்றிருந்தபோது பெண் எஸ்.பியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான புகார் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு டிஜிபியிடமும், உள்துறை செயலாளரிடமும் புகாரளிக்க சென்னை நோக்கி வந்த பெண் எஸ்.பியை தடுக்க சினிமா பாணியிலான செயல்களில் ராஜேஷ்தாஸ் ஈடுபட்ட தகவல்கள் ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.

இதனையடுத்து ராஜேஷ்தாஸ் மீதான பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதன்படி ராஜேஷ்தாஸ் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி டி.கண்ணன் உள்ளிட்டோர் மீதும் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், “முதல்வரின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வரும் வழியில் ராஜேஷ்தாஸை வரவேற்க மாவட்ட எல்லைகளில் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருந்த போது குறிப்பிட்ட அந்த டெல்டா மாவட்ட பெண் எஸ்பியிடம் சட்டம் ஒழுங்கு குறித்து பேச வேண்டும் என்று தனது காரில் ஏறும் படி கூறியுள்ளார்.

காரில் ஏறிய பின்னர் பெண் ஐபிஎஸ் வசதியாக அமருவதற்காக காரில் headrestஐ சரிபடுத்தி அவருக்கு சில திண்பண்டங்களையும் ராஜேஷ்தாஸ் வழங்கியுள்ளார். ஆனால் அவற்றை ஏற்க அந்த பெண் ஐபிஎஸ் மறுத்துள்ளார். பதற்றத்தில் வியர்த்து காணப்பட்ட அந்த பெண் அதிகாரிக்கு ஒரு துண்டை கொடுத்து துடைத்துக்கொள்ளும்படி சொல்லி இருக்கிறார் ராஜேஷ்தாஸ்.

பின்னர், அவரது கையை பிடித்த ராஜேஷ்தாஸ் அவரிடம் ஒரு பாட்டு பாடச் சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்க தானே ஒரு பாடலையும் பாடியுள்ளார். அவரது செயல்களால் சங்கடமான போதும் அந்த பெண்ணி கையை விடாமல் பிடித்திருந்திருக்கிறார் ராஜேஷ் தாஸ்.

அடுத்த சில நிமிடங்களில் அடுத்த மாவட்ட எல்லைகளில் மற்ற காவல்துறை அதிகாரிகளை கண்டதும் அந்த பெண்ணின் கையை விட்டிருக்கிறார். அதனையடுத்து வேகமாக காரை விட்டு இறங்கிய பெண் அதிகாரி உடனடியாக அங்கிருந்த ஜியாவுல் ஹக் என்ற ஐபிஎஸ் அதிகாரியின் காரை கேட்டு வாங்கி வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

நடந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் மற்றும் வட மாநிலத்தில் உள்ள தனது கணவரிடமும் தெரிவித்தார். மறுநாளே ராஜேஷ் தாஸ் மீது புகாரளிக்க சென்னைக்கு புறப்பட்டிருக்கிறார் பெண் ஐபிஎஸ். அப்போதுதான் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வைத்து தனது அடிப்பொடிகள் மூலம் ராஜேஷ்தாஸ் சினிமா தனத்தை நடத்தியிருக்கிறார்.

அதேசமயம், பெண் ஐபிஎஸ் அதிகாரியின் மாமனாரிடமும் சமாதானம் பேசுவதற்கு ராஜேஷ்தாஸ் முற்பட்டிருக்கிறார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories