தமிழ்நாடு

“மெட்ரோ ரயில் அறிவிப்பு மட்டும் வருது; நிதி எங்கே?”: அ.தி.மு.க-பா.ஜ.க அரசுகள் மீது கோவை மக்கள் அதிருப்தி!

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை.

“மெட்ரோ ரயில் அறிவிப்பு மட்டும் வருது; நிதி எங்கே?”: அ.தி.மு.க-பா.ஜ.க அரசுகள் மீது கோவை மக்கள் அதிருப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தேர்வு செய்து 10 ஆண்டுகளாகியும், இதுவரை ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் கோவை மக்கள் பா.ஜ.க - அ.தி.மு.க அரசுகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு கடந்த 2011ம் ஆண்டு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், 19 நகரங்களைத் தேர்வு செய்தது. இந்தத் திட்டத்திற்கான நிதியில் 50% மத்திய அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் கோவை நகரமும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதோடு தேர்வு செய்யப்பட்ட பல நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால், கோவை நகரில் இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், “ரூ.6,683 கோடி மதிப்பில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகிறது” என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வினர் நிதி அறிவிக்கப்பட்டு விட்டதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

ஆனால், பட்ஜெட் உரையில் கோவை மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக எந்தத் தகவலும் இல்லை. கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் அ.தி.மு.க அரசு இத்திட்டம் குறித்து பலமுறை பேசினாலும், இதுவரை நிதி ஒதுக்கப்படவோ, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவோ இல்லை.

வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதோடு சரி; திட்டத்தை செயல்படுத்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உடனடியாக அதிக கமிஷன் பெறும் திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கி வருவதாக அ.தி.மு.க அரசு மீது கோவை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories