தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு உடனடி உதவி: ”தி.மு.க தலைவர் நூறாண்டு வாழவேண்டும்”- குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி!

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவிய தி.மு.க தலைவருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிக்கு உடனடி உதவி: ”தி.மு.க தலைவர் நூறாண்டு வாழவேண்டும்”- குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தங்களுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கிய தி.மு.க தலைவருக்கு மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாண்டியராணி, சுந்தரவள்ளி, சுதா ஆகியோர் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் பங்கேற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தங்களது ஏழ்மையான சூழ்நிலை குறித்து தெரிவித்தனர். அவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் அறிவுறுத்தலின்படி இன்று தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் மாற்றுத்திறனாளி வசிக்கும் வீட்டுக்குச் சென்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சொந்த பணம் 50,000 ஆயிரம் ரூபாயை மருத்துவச் செலவுக்கு வழங்கினார்.

தி.மு.க தலைவரின் உதவியைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் “உயிர் உள்ளவரை தி.மு.க தலைவரை மறக்க மாட்டோம் ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்ல மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம். அவர் 100 ஆண்டுகள் வாழவேண்டும்” என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது மாவட்ட துணை செயலாளர் சிவனாண்டி, ஒன்றிய செயலாளர் சுதாகரன் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories