தமிழ்நாடு

ஜெராக்ஸ் முதல்வர் வேண்டாம்; அசல் முதல்வரை தேர்ந்தெடுப்போம் : வேலைவாய்ப்பு முகாமில் செந்தில்பாலாஜி பேச்சு!

ஜெராக்ஸ் முதல்வர் வேண்டாம் ஒரிஜினல் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என கரூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

ஜெராக்ஸ் முதல்வர் வேண்டாம்; அசல் முதல்வரை தேர்ந்தெடுப்போம் : வேலைவாய்ப்பு முகாமில் செந்தில்பாலாஜி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கரூரில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வி.செந்தில்பாலாஜி ஃபவுண்டேஷன்ஸ் சார்பில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் டிப்ளமோ மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தி.மு.க தலைவர்மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வி.செந்தில்பாலாஜி ஃபவுண்டேஷன்ஸ் சார்பில் கரூர் திருகாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. நேர்முகத் தேர்வு மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைள் வழங்கப்பட்டன.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் பானுமதி, வி.செந்தில்பாலாஜி ஃபவுண்டேஷன்ஸால் உருவாக்கப்பட்ட Hope of Karur (கரூரின் நம்பிக்கை) என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர் பானுமதி உள்ளிட்ட 5 பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 5 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகியும், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் பேசிய செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., “மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறியது. தற்போது ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலையை இழந்து வருகின்றனர். மாநில அரசோ காலியாக உள்ள லட்சகணக்கான பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது.

இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் 8 வழிச்சாலை அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. ஏனென்றால் அதில் கமிஷன் கிடைக்கும். வேலை வாய்ப்பு செய்து கொடுத்தால் என்ன கிடைக்கப் போகிறது என நினைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஜெராக்ஸ் முதல்வர் வேண்டாம்; அசல் முதல்வரை தேர்ந்தெடுப்போம் : வேலைவாய்ப்பு முகாமில் செந்தில்பாலாஜி பேச்சு!

இன்னும் 60 நாட்களில் நடக்க இருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றம் கொண்டு வர இளைஞர்கள் ஒன்றுபட்டால் முடியும். தமிழ்நாட்டிற்கு என பண்பாடு, கலாச்சாரம் என உள்ளது. இவை அனைத்தையும் மத்திய அரசிடம் அடகு வந்து விட்டனர். இதை மீட்டெடுக்கும் வகையில் இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டிய பிறகே ஜெராக்ஸ் முதல்வரான எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு திட்டமாக செய்து வருகிறார். நமக்கு நகல் வேண்டாம். அசல் முதல்வராக தி.மு.க தலைவரே ஆட்சியில் அமர்ந்தால் தமிழகம் சிறந்த நிலைக்கு செல்லும்.

இங்கு சொந்த உழைப்பில் முன்னேறியவர்கள் உள்ளனர். அடுத்தவர் உழைப்பில் முன்னேறியவர்களும் உள்ளனர். சொந்த உழைப்பில் முன்னேறுவதுதான் நிரந்தரம். அடுத்தவர் உழைப்பில் முன்னேறுவது கானல் நீராக முடியும்.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories