தமிழ்நாடு

“ஆறு, குளங்களில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் மதுபானம் ஆறாக ஓடுகிறது” - ஐகோர்ட் மதுரை கிளை!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்.

“ஆறு, குளங்களில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் மதுபானம் ஆறாக ஓடுகிறது” - ஐகோர்ட் மதுரை கிளை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை தட்டான்குளம் பிரதான சாலை மற்றும் மேலூர் சாலையில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி தாஹா முகமது என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் பிறப்பித்த உத்தரவு:

* பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்பு பகுதி அருகே வைப்பதற்கு மதுபானக்கடைகள் ஒன்றும் புத்தக கடையோ, மளிகை கடையோ இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

* மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

* ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் தமிழக அரசு, மக்கள் நலனுக்கான பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி செலவிடுகிறது என்பதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

* தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும்படி நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு வலியுறுத்தல்

* பூரண மதுவிலக்கு என்பதை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

*மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும், குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என்பன உள்ளிட்ட பல நேர்மறையான முன்னேற்றங்களை அரசுக்கு பட்டியலிட்டு காட்டியுள்ளனர்.

* இறுதியாக, நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா என்ற கேள்வியும் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள கடை பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை தட்டான்குளம் பிரதான சாலை மற்றும் மேலூர் சாலையில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி தாஹா முகமது என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

banner

Related Stories

Related Stories