தமிழ்நாடு

21 மாநிலங்கள் அனுமதிக்காத கோவாக்ஸின் தடுப்பூசியை 3432 பேருக்கு செலுத்திய தமிழக அரசு - வெடிக்கும் சர்ச்சை!

தமிழ்நாட்டில் 3,432 பேருக்கு போடப்பட்டுள்ளது குறித்து ரவிக்குமார் எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.

21 மாநிலங்கள் அனுமதிக்காத கோவாக்ஸின் தடுப்பூசியை 3432 பேருக்கு செலுத்திய தமிழக அரசு - வெடிக்கும் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கோவாக்ஸின் தடுப்பூசியை அனுமதிக்காதபோது தமிழ்நாட்டில் 3,432 பேருக்கு போடப்பட்டுள்ளது குறித்து ரவிக்குமார் எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்றைத் தடுக்க இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளை 7 லட்சம் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தும் விதமாக ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி பணியைத் துவக்கியது மத்திய பா.ஜ.க அரசு.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடியாததால், அதன் செயல்திறன் இன்னும் உறுதியாகவில்லை என்றும் கோவாக்சின் தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மக்களவையில் பேசிய விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளன என்றும், ஃபைஸர் பயோடெக் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் அதன் விபரங்களைத் தரவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ள சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே, “2021 பிப்ரவரி 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 59.56 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் 3.02 லட்சம் பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. அதற்கான மாநில வாரியான விவரம் தரப்பட்டுள்ளது. ஃபைசர் பயோடெக் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மாநில வாரியாகத் தரப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்கும்போது 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கோவாக்ஸின் தடுப்பூசியை அனுமதிக்கவில்லை என்பதும், தமிழ்நாட்டில் 3,432 பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும் தெரிகிறது.

இதனால், கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்ட எத்தனை பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories