தமிழ்நாடு

பிப்.,7ல் கோரிக்கை.. 9ம் தேதி உதவிக்கரம் நீட்டிய தி.மு.க.. ஏழைப் பெண்ணின் வறுமையை போக்கிய மு.க.ஸ்டாலின் !

மாற்றுத்திறனாளி மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடித்த ஏழைப் பெண்ணின் குடும்பத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

பிப்.,7ல் கோரிக்கை.. 9ம் தேதி உதவிக்கரம் நீட்டிய தி.மு.க.. ஏழைப் பெண்ணின் வறுமையை போக்கிய மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் வடக்கு, பட்டம்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தனது குடும்ப நிலை குறித்து மாற்றுத்திறனாளி மகனுடன் வருகை தந்து கண்ணீர் மல்க உதவி கேட்டு கோரிக்கை வைத்த பெண்ணுக்கு துரிதமாக உதவிட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர் தங்கம் தென்னரசு நேரில் சென்று “உங்கள் சகோதரர்களாக இருந்து உங்கள் கவலையை தீர்த்து வைப்போம் என்று கழகத் தலைவர் அவர்கள் கூறினார்” என்று அப்பெண்மணியிடம் கூறி உடனடியாக ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

நிதியுதவி பெற்றுக் கொண்ட அப்பெண்மணி, “கோரிக்கை வைத்த ஓரிரு நாளிலே ஓடோடி வந்து ரூ.2 லட்சம் வழங்கி எங்கள் குடும்பத்தில் ஒளியேற்றி எங்கள் வாழ்க்கையிலும் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார் ஐயா ஸ்டாலின் அவர்கள், அவருக்கு எனது நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விருதுநகர் வடக்கு மாவட்டம், பட்டம்புதூரில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்றிட கழகத் தலைவர் அவர்கள் வருகை தந்தபோது, வரும் வழியிலேயே சிவகாசி தொகுதி ஆனையூரைச் சேர்ந்த பாண்டிதேவி என்ற பெண் கழகத் தலைவர் அவர்களிடம் கூறியதாவது : -

“நான் ஒரு ஆதரவற்ற விதவைப் பெண். என் மகன் ஒரு மாற்றுத்திறனாளி. படுத்தபடுக்கையாக இருக்கிறான். நான் தினமும் வேலைக்காக எங்கெங்கோ போராடி, உதவி கேட்டு எங்கெங்கோ போய்கேட்டு இருக்கிறேன். எந்தஅதிகாரியும் என் கோரிக்கையை கேட்கவில்லை. அவர்கள் திரும்பிப்பார்க்கவே இல்லை. மாற்றுத்திறனாளியான என் மகனை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டதால் நான் கருணைக் கொலைக்குக்கூட போய் விட்டேன். (கண்ணீர்விட்டு அழுகிறார்). பிள்ளையைக் கொன்னுட்டு நாங்களும் தூக்கில் தொங்கி விடலாம் என்று எவ்வளவோ போராடிட்டோம். நீங்கள் முதலமைச்சராகவந்து, தயவு செய்து எங்கள் குடும்பத்தினரை ஏறெடுத்துப்பாருங்கள் சார்”- என்று கூறினார்.

அப்போது அவரது கோரிக்கையை பரிவுடன் கேட்ட கழகத் தலைவர் அவர்கள், “கவலைப்படாதம்மா, உங்களுக்கு ஆதரவா நாங்கள் இருக்கிறோம்” என்று கூறிவிட்டு நிகழ்ச்சிக்குச் சென்றார். விதவைப் பெண்ணுக்குகழகத் தலைவர் ஆறுதல்!நிகழ்ச்சி தொடங்கியதும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இப்பெண்மணி குறித்து பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான்வரும் போது, பாண்டிதேவி அம்மையாரை நேரடியாகப்பார்த்தேன், அவர் என்னிடத்தில் குறைகளைக் கூறினார். அவருக்கு நான் சொல்வது ரொம்ப வேதனைப்படாதீங்கம்மா, “நாங்கள் எல்லாம் உங்களுக்கு ஆதரவா இருக்கோம். நாங்கள் எல்லாம் உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம். கவலைப் படாதீங்க!

உங்கள் பிரச்சினையைத் தீர்க்க நூறு நாட்கள் பொறுத்து இருக்கணும்; ஆட்சிக்கு வந்துதான் செய்யணும்; என்று அவசியமில்லை. உங்களுக்கு அதற்கு முன்கூட்டியே நிச்சயமாக என்ன செய்யணுமோ, அதனை உறுதியாக நாங்கள் முன்நின்று செய்வோம். நம்முடைய மாவட்டச் செயலாளரிடத்திலும், கட்சி நிர்வாகத்திலும் கலந்து பேசி அதற்குரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுப்போம். நம்பிக்கையாக இரும்மா! கவலைப்படாதே” - என்று ஆறுதல் மொழி கூறினார்.

செயல் வடிவம் கொடுத்த தலைவர்!

கழகத் தலைவர் அவர்கள் கடந்த 7ஆம் தேதி அன்று ஆறுதல் கூறியது மட்டு மின்றி, அதற்கு உடனடியாக செயல் வடிவம் கொடுத்தார். ஆம்! கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருமதி பாண்டிதேவி அம்மையாரின் இல்லத்திற்கே விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு நேரில் சென்று கழகத் தலைவர் அவர்கள் சார்பில் நேற்று (9.2.2021) காலை ரூபாய் 2 லட்சத்திற்கான நிதி வழங்கி, ‘மேலும் தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

‘ உங்கள் கவலையை நாங்கள் போக்குகிறோம்’ விருதுநகர் வடக்கு மாவட்டம் - பட்டம்புதூர் ஊராட்சியில் கடந்த 7ம் தேதி அன்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் ஆனையூரைச் சேர்ந்த பாண்டிதேவி, தனது மாற்றுத்திறனாளி மகனுடன் வருகை தந்து உதவிகேட்டு கோரிக்கை வைத்தார்.

அப்பெண்மணியின் வறுமை நிலையை அறிந்த கழகத் தலைவர் அவர்கள் நிகழ்ச்சி மேடையிலேயே “100 நாள் காத்திருக்க வேண்டியதில்லை, உடனடி உதவி செய்யப்படும்” என்று உறுதி அளித்த காட்சி. என்று கழகத் தலைவர் அவர்கள் கூறியுள்ளார் ; என்று அப்பெண்மணிக்கு தைரியம் கூறினார். 7 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு நேரில் சென்று குடும்பத்தின் கஷ்டத்தை திருமதி பாண்டிதேவி கூறினார். 9 ஆம் தேதியே அக் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி அவர்களது குடும்பத்தில் ஒளியேற்றிவைத்தார் கழகத் தலைவர் அவர்கள்.

உடனடி நிதி உதவி பெற்றுக் கொண்ட திருமதி பாண்டிதேவி கூறுகையில், “அய்யா, நான் தொழிற்பேட்டையில் 130 ரூபாய் சம்பளத்தில் காண்ட்ராக்டில் வேலைக்குப் போறேன். அந்த வேலையைப்பார்த்து விட்டு வந்து என்னால் என் குடும்பத்தினை நடத்த முடியவில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, குழந்தையை படிக்க வைக்க, சாப்பாட்டுக்கு செலவு செய்ய முடியவில்லை.

இந்த மாற்றுத்திறனாளி மகனின் வைத்திய செலவு செய்ய என்னால் சமாளிக்க முடியவில்லை, ஸ்டாலின் வந்து என் மகனின் மருத்துவச் செலவுக்கும், என் பொண்ணு படிப்புக்கும் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். ஸ்டாலின் அய்யா ரொம்ப நல்லா இருக்கணும். ரூ.2 லட்சம் கொடுத்து இருப்பது எனக்கு ஒரு பெரியமலை மாதிரி. ஸ்டாலின் அய்யா அடுத்து முதல்வரா வரணும். என் குடும்பம் மாதிரி இருக்கின்ற மாற்றுத் திறனாளிகளின் தாய் மார்களுக்கு உதவிகளை செய்வார், ஏறெடுத்துப் பார்ப்பார். உடனடியாக உதவி செய்த ஸ்டாலின் அய்யா அவர்களுக்குஎன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பிப்.,7ல் கோரிக்கை.. 9ம் தேதி உதவிக்கரம் நீட்டிய தி.மு.க.. ஏழைப் பெண்ணின் வறுமையை போக்கிய மு.க.ஸ்டாலின் !

7ஆம் தேதி கேட்ட கோரிக்கைவைத்த திருமதி பாண்டி தேவியை நேரில் சந்தித்து கழகத் தலைவர் அவர்கள் சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கிய விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு கூறுகையில், 7ஆம் தேதி அன்று விருதுநகர் வடக்கு - பட்டம் புதூரில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில், கழகத்தலைவரிடம் கண்ணீர் மல்கத் தன் நிலைமையை எடுத்துரைத்த சிவகாசி தொகுதி, ஆனையூரைச் சார்ந்த சகோதரி பாண்டிதேவிக்கு கழகத் தலைவர் அவர்களின் ஆணையின்படி, மாவட்டக்கழகத்தின் சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவியினை அவரது பெண் குழந்தையின் படிப்பிற்காக வழங்கினோம்.

மாற்றுத்திறனாளியான தன் மகனையும், மகளையும் கவனிக்க, வேலைவாய்ப்பு வேண்டிய சகோதரியின் கோரிக்கையினைக் கழக ஆட்சி அமைந்ததும் கழகத் தலைவர் அவர்கள் நிறைவேற்றித் தருவார் - என்ற உறுதியையும் அப்பெண்மணியிடம் அளித்தோம். உதவிகோரி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய கழகத் தலைவர் அவர்கள், ‘சொன்னதை செய்வார், செய்வதைத்தான் சொல்வார்’ என்ற லட்சிய வரிகளுக்கு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே செயல் வடிவம் கொடுத்துவிட்டார்.

அடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி - அது கழகத் தலைவர் தலைமையில், கழகத்தின் பொற்கால ஆட்சிதான் என்று பாண்டி தேவியின் அருகில் வசிக்கும் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் தி.மு.க. ஆட்சி அமையப்போகும் அச்சாரத்திற்கு உறுதி அளித்தனர்.

banner

Related Stories

Related Stories