தமிழ்நாடு

“தமிழக KV பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும்” - திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தல்!

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

“தமிழக KV பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும்” - திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அதே நேரத்தில் சமஸ்கிருதம், இந்தி மொழிகள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொழிகளில் ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் ஏழாம் வகுப்புக்கு உயர்த்தப்படுகிறார்கள். சமஸ்கிருதம், இந்தி மொழிகள் கட்டாயம் எனும்போது தமிழகத்தில் ஏன் தமிழை கட்டாயம் என்று அறிவிக்கக் கூடாது..?

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்க வேண்டும். இதேபோன்று மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்களும் இதே கோரிக்கையை முன்னிறுத்தினர். இதுகுறித்து கல்வித் துறை அமைச்சகம் கவனிக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories